பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி திமுக அரசை கண்டித்து மற்றும் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் எஸ் சிவபிரகாசம் அவர்களின் முன்னிலையில் பர்கூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாவட்டம் நகரம் ஊராட்சி அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும்தமிழ்நாடு முழுவதும் கல்குவாரிகள் செயல்பாட்டிலேயே ஊழல் மலிந்து கனிம வளங்களை கொள்ளை தமிழகம் எங்கும் அரங்கேறி வருகிறது தமிழகத்தின் இயற்கை வளம் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது
அங்கன்வாடி மையங்கள் போதுமான அடிப்படை வசதி இன்றி குழந்தைகள் வெளியே அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது இதையெல்லாம் கண்டு கொள்ளாத திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது
மேலும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் அனைத்து மகளிர் தலைவிகளுக்கும் குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கும் சராசரியாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் முறைகேடாக நடைபெறுகின்ற கல்குவாரிகளை நிறுத்த வேண்டும் அத்தியாவசியமான பொருட்கள் அரிசி பருப்பு, எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் மேலும் ஆரம்ப சுகாதாரத்தில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் இல்லாமல் இருக்கும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் உடனடியாக மருத்துவர்கள் செவிலியர்களை நியமிக்க வேண்டும் அரசு பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது