மாதவரம் மஞ்சம்பாக்கம் அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ரூட்டு தல பிரச்சனைகள் இல்லாதவாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள அறிவுரை ஏற்படுத்தினார்.

பொதுவாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மாநகர மாநகர பேருந்துகளில் ரூட்டு தல பிரச்சனைகள் அடிக்கடி பிரச்சினையில் ஈடுபடுவதாலும் மேலும் பஸ் நிலையங்களில் பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தியுடன் வந்து அங்கு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு ரகளையில் ஈடுபடுவதாலும் இது போன்ற செயல்களால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டு படிப்பில் கவனம் இல்லாமல் அவர்கள் மீது வழக்குப்பதிவு சூழ்நிலை உள்ளது.

இதனை முற்றிலுமாக தடுக்க கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் சக்திவேல் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மறைந்த அப்துல் கலாம் அய்யாவின் வழிமுறைகளை சிறு கதைகளின் மூலம் எளிமையாக எடுத்துரைத்து தனது அனுபவங்களை மாணவர்களிடம் சொல்லி பஸ்ஸில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் படிப்பில் கவனம் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இருக்க வேண்டும் எனவும் ரூட்டு தல பிரச்சனைகளில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லியும் மேலும் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தது வாழ அறிவுரை ஏற்படுத்தினார்.

மேலும் இதுபோல் பிரச்சினைகளில் ஈடுபடுவதாலும் சில மாணவர்கள் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டணைக்குள்ளாகிறார்கள்.
எனவே இதனை முற்றிலுமாக தடுக்க மாணவர் முன் வரவேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் உதவி ஆய்வாளர்கள் கல்லூரி முதல்வர் மோகனகிருஷ்ணண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *