தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்

அத்தனாவூரில் 7.09 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம்
ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூரில் 7.09 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணி நடைபெறுவதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் படகு இல்லம், இயற்கை பூங்கா, தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்.

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை மிகச்சிறந்த துறையாக வளர வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக முதல்வர் தொடர்ந்து சுற்றுலாத் துறைக்கு பல்வேறு அறிவுரை வழங்கி பணிகளை எல்லாம் நிறைவேற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளார். ஏலகிரி மலை என்பது ரம்யமான ஒரு சூழல், அழகான தட்பவெட்பநிலையை கொண்டுள்ளது. ஏலகிரி மலையில் நிறைய இடத்தில் ரிசார்ட் கட்டப்பட்டுள்ளது, மேலும் கடந்த வருடம் மட்டும் ஏலகிரிமலையில் 9 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த வருடம் ஆறு மாதத்திற்குள்ளாக 5 லட்சத்து 75 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

மேலும் சுற்றுலாத்தளத்தை மேம்படுத்திட திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலா துறையின் மூலமாக 2021-2022 நிதியாண்டில் சாகச சுற்றுலா தளத்தை மேம்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது, சுற்றுலாத்துறை என்பது சாகச சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா போன்ற பல சுற்றுலா பணிகளை சுற்றுலாத்துறை மூலமாக செயல்பட்டுவருகிறது. மேலும் மருத்துவ சுற்றுலா என்று ஆரம்பத்திலேயே வந்த உடனே அறிவித்து, மற்ற நாடுகளுக்கும் தெரிவித்து சென்னையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது,

இந்த மாநாட்டில் 25 நாடுகள் பங்கேற்றது. உலகத்தில் மருத்துவம் என்பதை நமது ஊரில் குறைந்த விலையில் சிறந்த மருத்துவம் சென்னையில் மற்றும் கோயம்புத்தூரில் கிடைப்பது போல் வேறு எங்கும் கிடைப்பதில்லை.

அதனால் மற்ற நாடுகளில் இருப்பவர்களும் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலாத்துறை ஒன்றின் பின் ஒன்றாக எல்லா வகையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலையில் சாகச விளையாட்டுக்கள், சுற்றுச்சூழல் கட்டப்பட்டு, வாகனம் நிறுத்துமிடம், நடைபாதை, உணவகம், தங்கும் வசதிகள், மின்விளக்குகள், தொலைநோக்கிகள், இருக்கைகள், போன்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்காகத்தான் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை புரிந்தால் ஏலகிரி மலையில் வேலை வாய்ப்பு இருக்கும், தனி மனிதனின் வருமானம் பெறவும். அதன் அடிப்படையில் சுற்றுலா தளத்தை மேம்படுத்தி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ அவர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏலகிரி மலை அத்தனூர் படகு சுற்றுலா, நடைபாதை, மின்விளக்கு போன்றவற்றை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல் நிலாவூரில் சிறிய படகு இல்லம், சிறிய பூங்கா அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சுற்றுலாத்துறை என்பது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை போன்ற அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். முதலில் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார்.

இதில் தமிழக சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *