தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூரில் அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய சபைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஸ்டேட் பேங்க் எதிரில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய சபைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன், திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கிறிஸ்துவ ஐக்கிய சபையின் பேராயர் சர்மா நித்தியானந்தம் மற்றும் கிளமெண்ட், ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.
இதில் திருப்பத்தூர் மாவட்ட கிறிஸ்துவ ஐக்கிய சபையின் மாவட்ட செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..