கடந்த ஆண்டு ரூ. 10 ஆயிரம் ஏலம் போன பருத்தி, இந்தாண்டு குவிண்டால் ரூ. 7,500 க்கு விற்பதால் விவசாயிகள்
கவலையடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா வில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி,
வெட்டாறு,வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன்ஆறு ஆகியவை மூலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு 8,950 எக்டேர் சம்பா, 4ஆயிரம்
எக்டேரில் குறுவை உள்ளிட்ட சாகுபடி கள் செய்யப்பட்டது. அறுவடைக்கு பின் தாளடி சாகுபடியும் மேற்
கொள்ளப்பட்டது.
நெல் அறுவடைக்கு பிறகு, கோடை சாகுபடியாக வலங்கைமான், ஆதிச்ச மங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, மருவத்தூர், மேல விடை
யல் உள்ளிட்ட பல்வேறுகிராமங்களில் கடந்த ஆண்டை விட கூடுதலாக8,250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு பருத்தி க்கு கூடுதல் விலையும் கிடைத்தது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் 10-ம்தேதி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி முதல் ஏலத்தில் பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 11,139ரூபா
ய்க்கும், குறைந்த பட்சவிலையாக குவிண்டால்
9,089 ரூபாய்க்கும் சராசரிவிலையாக குவிண்டால்
10,022 ரூபாய்க்கும் ஏலம் போனது.
இந்நிலையில் இந்தாண்டு கடந்த 16-ம்தேதி நடைப்பெற்ற பருத்தி முதல் ஏலத்தில் பருத்தி அதிக பட்ச விலையாக குவிண்டால்6,670 ரூபாய்க்கும், குறைந்த பட்ச விலை யாக 5,509 ரூபாய்க்கும்,சராசரி விலையாக குவிண்டால் 6,109 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்தாண்டு பருத்தி சராசரி விலை ரூ. 10ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில், நடப்பாண்டில்பருத்தி சராசரி விலை ரூ
6ஆயிரத்துக்கும் குறை வாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 14-ம்தேதிஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால்
அதிகபட்ச விலைக்கு ரூ.6,400 விலை போனது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் பருத்தி அதிக
பட்ச விலையாக குவிண் டால் ரூ. 7,500 க்கு ஏலம் போனது. இதனால் பருத்தி விவசாயிகள் சற்று ஆறுகள் அடைந்து
உள்ளனர்.
மேலும் பருத்தி சாகுபடியில் களை நிர்வாகம், மண்
அணைத்தல், உரம் உள்ளிட்ட உற்பத்தி செலவுகள் அதிகரித்து ள்ளது. இதனால் குவிண் டால் பருத்தி ரூ. 10ஆயிர
த்தை தாண்டி விற்றால்ஓரளவு பருத்தி சாகுபடி யில் நஷ்டம் இல்லாமல்சாகுபடி செய்ய முடியும் என்று விவசாயிகள் தெரி
விக்கின்றனர்.