தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கரகத அள்ளியில் 5.80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா கரகதஅள்ளி ஊராட்சிமன்றதலைவர் முத்துவேல் தலைமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்.செந்தில்,கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர்சுப்ரமணி, விமலன், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாலக்கோடு ஒன்றியம் கரகதஅள்ளி ஊராட்சியில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர்
கே.பி.அன்பழகன் அவர்கள் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து
10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கும் பணிக்கு இன்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துனைத்தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பிணர்கள் குப்புசாமி,பாஸ்கர்,
அதிமுக தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீகாந்த், ராஜா, மகளிர் அணி ஒன்றிய செயலாளர் இலட்சுமி உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.