வலங்கைமான் அருள்மிகு தையல்நாயகி சமேதஸ்ரீவைத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத
செவ்வாய்க்கிழமை முன்னிட்டும், பெளர்ணமி தினத்தை முன்னிட்டு 1008 தாமரை மலர்கள் அர்ச்சனை நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்காரத் தெருவில் உள்ள அருள்மிகு தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீ
ஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் ஆடி மாதம் செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு1008 தாமரை மலர்களால்ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்போற்றியுடன் அருள்மிகு தையல்நாயகி அம்பாளு க்கு சிறப்பு அர்ச்சனை நடைப்பெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு ஆடி செவ்வாய்க்கிழமை மற்றும் பெளர்ணமியும்
ஒரே நாளில் வந்தது மிகசிறப்பாகும்.
அதனை யொட்டி அருள்மிகு தையல்நாயகி அம்பாளு க்கு 1008 தாமரை மலர்களால் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் போற்றியு டன் சிறப்பு அர்ச்சனை யுடன் கூடிய பெளர்ணமி
பூஜைகள் நடைப் பெற்றது.
இதில் தீபாராதனை மற்றும் அருட்பிரசாதம்,அன்ன
தானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திராளக கலந்து கொண்டனர்.