பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே தஞ்சை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான திருவலஞ்சுழி சாலையில் திடிரென சாய்ந்த வழி தகவல் பலகையால் சற்று போக்குவரத்து பாதிப்பு…

அதிஷ்டவசமாக வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் தஞ்சை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று சாலை போடப்பட்டுள்ளது இதில் வழி தகவல் பலகைகள் வழி நெடுக அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென வழி தகவல் பலகை மின்கம்பியில் சாய்ந்தால் வாகன ஓட்டிகளும் நடந்து சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .

இதனால் மின் கம்பியில் சாய்ந்த நிலையில் உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பியும் சற்று அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதுஇதனால் சாலையில் சற்று போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.பின்பு வாகன ஓட்டிகளே சாலையை போக்குவரத்து இல்லாமல் அவர்களே சரி செய்து கடந்து சென்றனர்.

மேலும் சாய்ந்த நிலையில் உள்ள தகவல் பலகை ஆபத்தான நிலையில் சாய்ந்தபடி உள்ளதுஇந்தத் தகவல் பலகை நெடுஞ்சாலைத் துறையினர் சரி செய்வார்களா ? என எதிர்பார்ப்பில் உள்ளனர் வாகன ஓட்டிகள்

சாய்ந்துள்ள வழி தகவல் பலகை வாகன ஓட்டிகளுக்கும் நடைபாதை செல்பவர்களுக்கும் சற்று அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்வதற்கு பயமும் தயக்கமும் அடைந்துள்ளனர்.விரைவில்சாலையில் திடிரென விழுந்த வழி தகவல் பலகையை சரிசெய்ய வேண்டும் எனவும் ,
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *