ஆர்.கண்ணன்,செய்தியாளர் மணப்பாறை.

மணப்பாறை அருகே ராஜகோடாங்கிபட்டியில் எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் திருவிழா.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள ராஜகோடாங்கிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாளம்மன், ஸ்ரீ காளியம்மன் கோயில் ஆடி மாத திருவிழா கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சியானது ஆலய திடலில் நடைபெற்றது.
இந்த எருது ஓட்டத்திற்காக, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ராஜகம்பளத்து நாயக்கர் இனமக்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் தாங்கள் வளர்த்து வரும் எருதுகளுடன் வழிபாட்டு தளத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அவர்கள் வளர்த்து வரும் எருதுகள் உரிமி மேளம், தாரைத்தப்பட்டை முழங்க ஆலயத்துக்கு அழைத்துவரப்பட்டு அங்கு மந்திரிக்கப்பட்ட புனித நீர் தெளிக்கப்படுகிறது. அதன்பின் எருதுகள் சுமார் 2 கிமீ மீட்டர் தொலைவிற்கு அழைத்துச்சென்று அங்கிருந்து வழிபாட்டு தளத்தை நோக்கி அனைத்து எருதுகளும் ஒரே நேரத்தில் அவிழ்த்துவிடப்படுகிறது. அவிழ்த்துவிடப்படுகிற எருதுகள் கொத்து கம்பு பூத்தாண்டும் பகுதி என எல்லை வரையறுக்கப்பட்ட பகுதியில் விரிக்கப்படிருக்கும் வேஷ்டியை முதலில் ஓடி வந்து தாண்டிச்செல்லும் எருது மேல், மஞ்சள் பொடி தூவி அவை முதலாவதாக வந்ததாக அடையாளம் காணப்படுகிறது. முதலில் வந்த எருதுக்கு எலுமிச்சை கனியும் மஞ்சளும் கொடுத்து மரியாதை செய்யப்படுகிறது. போட்டியில் முதலாவது வந்த விரிகெஜ்ஜல் நாயக்கர் மந்தை இனுக்கூர் சுக்காம்பட்டியை சேர்ந்த எருதுக்கு கனி பரிசாக அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ராஜகம்பளத்து நாயக்கர் இனமக்கள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *