சென்னை கொளத்தூர் செய்தியாளர்
மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட 31-வது வார்டு பத்மாவதி நகர் பிரதான சாலையில் தனியார் பள்ளி அருகே சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் உண்டாகி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

இந்த பிரதான 20 அடி சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் கால்வாயின் மேலே தனியார் சிலர் ஜேசிபி இயந்திரங்களை நிறுத்திவிட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் புதியதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாயின் மேற்புறங்கள் உடைந்து விழும் அபாயம் உள்ளது.

மேலும் அதன் எதிர்புறத்தில் பழுதடைந்த கார்கள் மாதக்கணக்கில் நிற்கின்ற படியாலும் தனியார் லாரிகள் பஸ்கள் இந்த தெருவில் நிறுத்தி வைப்பதாலும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுறும் சூழ்நிலை உண்டாகிறது.

மேலும் அதன் அருகே தனியார் பள்ளி இயங்குவதால் காலை ,மாலை வேலைகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் சூழ்நிலைகள் உள்ளது.

மேலும் அந்த வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடத்தில் காலிமனை அருகே உள்ளதால் தெருவில் வருவோர் போவர்கள் சிலர் அதை குப்பை தொட்டியாக உபயோகப்படுத்தி அதனை துப்புரவு பணியாளர்களே தீயிட்டு எரிக்கும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றார்கள். மேலும் இரவில் சமூக விரோத செயல்களுக்கு இந்த இடம் மிகவும் ஏற்றதாக இருப்பதால் சிலர் இதனை மது அருந்துவதற்கு பயன்படுத்துகின்றனர். இப்பகுதி குடியிருப்பு பகுதி என்பதால் அவ்வழியே சென்று வரும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே இதனை உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அவற்றை அகற்றி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *