ஆடிபெருக்கு – மஞ்சமேடு தென்பெண்ணையாற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

ஆடிப்பெருக்கு, சஷ்டி விரதம், நாளில் சகல நதி தீரங்களில் புனித நீராடுதல், முருகனுக்கு விரதமிருந்தும், அம்மனுக்கு பொங்கலிட்டும் வழிபடுதல் வழக்கம். இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர்.

நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும் இந்நாளில் நீருக்கு விழா எடுக்கும் நாள். நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள். புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆடிப் 18 ஆன இன்று ஆடிப்பெருக்கு விழா தென்பெண்ணை கரையோர பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கு பண்டிகை தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஸ்ரீ மாதேஸ்வரன் கோவிலில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர்.

இதற்காக இன்று காலை முதல் பக்தர்கள் அதிக அளவு குவியத் தொடங்கினர். பக்தர்களின் பாதுகாப்புக்காக பாரூர் போலீசார், மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டும், எச்சரிக்கை பலகைகள் வைத்தும், ஒலிபெருக்கி மூலமாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் போலீசார் ஈடுபட்டனர்.

தருமபுரி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் அதிக அளவு மஞ்சமேடு தெண்பெண்ணையாற்றி குவிந்து வருகின்றனர்.

குளிக்க வரும் பெண் பக்தர்களுக்கு உடைமாற்றும் அறை இல்லாத காரணத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். நீண்ட நாள் கோரிக்கையான பெண்களுக்கான உடை மாற்று அறை மற்றும் கழிவறை அமைத்துக்கொடுக்க கோரிக்கை வைக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *