நாமக்கல்
கொல்லிமலையில் ஆடி 18 ஆம் தேதி ஆடி பெருக்கு விழா வை முன்னிட்டு அருள்மிகு அரப்பிளீஸ்வரர் கவுண்டர் சேர்ப்பு தேர்த்திருவிழா ஆடி 17 ஆம். தேதி இரவு நேரத்தில் சிறப்பாக நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆடி18 ஆடி பெருக்கு தேர் திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு அரப்பிளீஸ்வரர் கவுண்டர் சேர்ப்பு தேர்த்திருவிழா ஆடி 17 நாளில் இரவு நேரங்களில் வருடா வருடம் சிறப்பாக நடைபெறும் ..
விடிந்தால் ஆடிப்பெருக்கு தேர் திருவிழா அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் கொல்லிமலை மலைவாழ் மக்கள் சுற்றுலா பயணிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் வள்ளி, தெய்வானைமுருகனின் திருக்கல்யாணம் புறப்பாடுஊர்வலம் வந்ததுமேலும்சிவனும், பார்வதியும் வாகனத்தின் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோயிலை சுற்றி வலம் வந்ததனர்.
இதனை தொடர்ந்து கொல்லிமலை மக்கள் ,சுற்றுலா பயணிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து மகிழ்ந்தனர் மேலும் பார்வதி சிவன் ஊர்வலத்தில் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
மேலும் மிகப்பெரிய திருவிழாவில் இரவு நேரத்தில் உள்ளூர்
காவல்துறையும் சேர்ந்த ஒருவர் கூடம் பாதுகாப்புபணிக்கு முன்வரவில்லை இருந்தும் இரவு நேர திருவிழா அமைதியாக சிறப்பாக நடைபெற்றது
மேலும் இதுபோன்று பெரிய திருவிழாக்களில் நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் அலட்சியமாக செயல்படுவது ஏன் என சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துக்கின்றனர்.