எண்ணூர் தாழங்குப்பம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கண்டித்து எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது
திருவொற்றியூர்
கொசத்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்க கட்டிட கழிவுகளை கொட்டி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆறு மாசுபடுவதை தடுக்கவும் கட்டிட கழிவுகளை அகற்ற கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் 8 கிராமங்கள் உள்ள மீனவர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுபாதுகாப்புக்காக சுமார் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதை தடுப்பதற்கு தண்ணீர் பீச்சி அடிக்கக்கூடிய ராட்சத வாகனங்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் போலீசார் வைத்திருக்கின்றனர்.
சென்னை எண்ணூர் தாழங்குப்பம் நெட்டுக்குப்பம் சின்ன குப்பம் பெரியகுப்பம் காட்டுகுப்பம் எண்ணூர் குப்பம் எர்ணாவூர் குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர்மின் கோபுரத்தை அமைக்க கூடாது என கூறி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊர்வலமாக வந்த 8 ஊரை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் மற்றும் மீனவ கிராம மக்கள் உள்ளிட்டோர் போராட்ட இடத்திற்கு வந்த பொழுது தடுப்புகள் அமைத்து போலீசார் நிறுத்தியதையடுத்து அவர்களுக்காக ஏற்படுத்திய பந்தலில் முன்பு அமர்ந்து கையில் பதாகைகளுடன் கண்டன கோஷங்கள் இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவ மக்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் கொசத்தலாற்றில் கட்டிடக்கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் எண்ணூர் பகுதியில் முழுவதும் வியாபாரிகள் மீனவர்களுக்கு கை கொடுக்கும் வகையில் கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்..
சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமூக தீர்வு எட்டப்படும் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலந்து சென்றனர்