கோயம்புத்தூர் லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைதி மற்றும் நல்லிணக்க மன்றம் (LMHSS-PHC) துவக்கப்பட்டது.
அமைதி மற்றும் நல்லிணக்க மன்றம் என்பது மாணவர்களின் அர்ப்பணிப்புணர்வை செயலாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் இதனை கருத்திற் கொண்டு பள்ளி முதல்வர் அருட்தந்தை முனைவர் வழக்கறிஞர் ஜாய் அரக்கல் அவர்கள் அமைதி மற்றும் நல்லிணக்க மன்றத்தை நிறுவ ஊக்குவிப்பை நல்கினார். அருட்தந்தைபிரான்சிஸ் சேவியர், இயக்குனர், திவ்யோதயா சர்வமத மையம், கோயம்புத்தூர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
மன்றத்தின் 2023-24 கல்வியாண்டுக்கான செயல் திட்டத்தை கண்காணிக்க பத்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்வகையான மன்றங்கள் மாணவர்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டுவர பல சமூக, சுற்றுச்சூழல் மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்