தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் மாவட்டஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுவிநியோகத்திட்டத்திற்கு தேவையான இன்றியமையாப் பொருட்களை சேமித்து விநியோகிக்கும் பணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.போடிநாயக்கனூர்நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் இந்திய உணவுக் கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது
நியாயவிலைக்கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபொருட்கள் முறையாக நகர்வு செய்யப்படுகிறதா என்றும் சரியான எடை அளவில் கொண்டு செல்லப்படுகிறதா என்றும் ஆய்வுசெய்தார் மேலும் கிட்டங்கியில் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு பதிவேடு காலி சாக்குகள் பதிவேடு உள்வரும் வாகனங்கள் மற்றும் வெளி செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்கான பதிவேடு, தரக்கட்டுப்பாட்டு பதிவேடு, எடை அளவு பதிவேடு, விற்பனை பதிவேடு, அரிசி மற்றும் கோதுமை நகர்வு பதிவேடு, அட்டியல் அட்டைகள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்கள்.
கிட்டங்கியினை தூய்மையாக பராமரிக்கவும் அரசு விதித்துள்ள விதிகளை முறையாக பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கிட்டங்கி பணியாளர்களுக்கு மாவட்டஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார்.
இவ்வாய்வின் போது, இளநிலை உதவியாளர் அன்பழகன் உள்ளிட்ட கிட்டங்கி பொறுப்பாளர்கள், பணியாளர்கள் பலர் இருந்தனர்.