தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்
13-வது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்குவலங்கைமான் சி பி ஜஒன்றிய குழுவின் சார்பில் கதர் ஆடை அணிவித்து, வாழ்த்து க்களை தெரிவித்தனர்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின்
13- வது மாநில மாநாடுவிருதுநகர் மாவட்டம்
இ ராஜபாளையத்தில் கடந்த 28,29,30.07.2023 ஆகிய மூன்று நாட்கள் நடைப்பெற்றது.
அம் மாநாட்டில் திருத்துறைப் பூண்டி ஒன்றிய பெருந்
தலைவர் அ. பாஸ்கர் மாநில பொதுச் செயலாளராகவும், கு. ராஜா மாநில நிர்வாக குழ உறுப்பினராகவும்,வலங்கைமான் ஒன்றியம் ஜி. ரவி மாநில குழ உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்கு வலங்கை மான் இந்திய கம்யூனி ஸ்ட் கட்சி ஒன்றிய குழுவின் சார்பில் கதர் ஆடை அணிவித்து, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் வலங்கைமான் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்ஒன்றிய செயலாளர் எஸ்.எம். செந்தில் குமார்,ஒன்றிய துணைச் செயலாளர் கே. செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்ஒன்றிய குழுவினர் கே.விஜயகுமார், எஸ். சண்
முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.