திருவள்ளூர்
சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த இரண்டு மாதத்தில் பக்தர் கள் செலுத்திய காணிக்கையை எண்ணிய போது 57 லட்சம் ரொக்கம் 105 கிராம் தங்கம் 5 கிலோ வெள்ளி கிடைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றிய சின்னம்பேடு ஊராட்சி யில் சிறுவாபுரி அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த இரண்டு மாதங்களாக பக்தர்கள் அளித்த காணிக்கையை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி, செயல் அதிகாரி கோ செந்தில்குமார், திருநின்றவூர் சரவணன், ஆய்வா ளர் கலைவானன் ஆகியோர் முன் னிலையில் உண்டியலை திறந்து எண்ணிய போது அதில் 56 லட்சத்து 76 ஆயிரத்து 634 ரொக்க பணம், 105 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி கிடைத்துள்ளது.