தமிழகத்தன் முதல் விற்பனை மையமாக பிலிப்ஸ் லைட்டிங் கோவையில் தனது பிரத்யேக விற்பனை மையத்தை துவக்கியது
உலக அளவில் முன்னணி நிறுவனமான பிலிப்ஸ் லைட்டிங் இந்தியாவில் தனது விற்பனையை அதிகரிக்கும் விதமாக தொடர்ந்து தனி விற்பனை மையங்களை துவக்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக கோவையில் பிலிப்ஸ் லைட்டிங் தனது முதல் விற்பனை மையத்தை துவக்கியது.
கோவை சத்தி சாலையில் சிவானந்தபுரம் எஸ்.ஆர்.பி.மில் ஸ்டாப் பகுதியில் எம்.எஸ்.என்.எண்டர்பிரைஸ் இணைந்து துவக்கிய இதன் துவக்க விழா எம்.எஸ்.என்.எண்டர்பிரைஸ் பங்குதார்ர்கள் சுமதி கணேசன்,முரளி அமுல்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் நிர்வாக இயக்குனர் அருள் குமார் கலந்து கொண்டு புதிய விற்பனையகத்தை திறந்து வைத்தார்.
இதில் கௌரவ அழைப்பாளர்களாக கலந்து பிலிப்ஸ் லைட்டிங் நிறுவனத்தின் தென் மண்டல விற்பனை மேலாளர் கவுரவ் கபூர்,ஏரியா விற்பனை மேலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பிலிப்ஸ் லைட்டிங் குறித்து கூறுகையில், கோவை நகரம் எங்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும், அதன் பெரிய வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வாழ்க்கைத் தேவைகள் காரணமாக. இங்கு பிலிப்ஸ் லைட் லவுஞ்சை திறப்பதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய மற்றும் சிறந்த-இன்-கிளாஸ் லைட்டிங் தீர்வுகளை இந்த மையத்தின் வாயிலாக வழங்க முடியும் என தெரிவித்தனர்.
மேலும் இங்கு தற்போதையை ஸ்மார்ட் வைபையால் இயங்கும் எல்.இ.டி.விளக்குகள்,சுவிட்சுகள்,மின் விசிறிகள் என பிலிப்ஸ் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் என தெரிவித்தனர்… .