நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் (03.08.2023) நடைபெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் .கு.பொன்னுசாமி முன்னிலையில் 437 பயனாளிகளுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், வில்வித்தை போட்டிகள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலைகுழுவினர் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு, சிறந்த அரங்கங்கள் அமைத்த அரசு துறையினருக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

வல்வில் ஓரி விழாவில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டார்.

தொடர்ந்து, கொல்லிமலை பேருந்து நிலையத்தில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற வில்வித்தை போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

மேலும் தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் வண்ண மலர்களால் அமைக்கபட்டிருந்த மலர் கண்காட்சியினை பார்வையிட்டார்.

தொடர்ந்து வல்வில் ஓரி அரங்கில் சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் இரண்டாம் நாளாளில் நடைபெற்ற தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், கொக்கலியாட்டம், மயிலாட்டம், மான்கொம்பு, பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், பரத நாட்டியம், தெருகூத்து, சேர்வை ஆட்டம், கொல்லிமலையில் சுற்றுலா முக்கியத்துவம் குறித்த நாடகம், பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டார்.

கொல்லிமலை வட்டம், செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் வருவாய் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.4.80 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறை சார்பில் 96 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.64.51 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டம் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.98.30 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.28.31 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.69,150/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.843/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.17,960/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 45 பயனாளிகளுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 138 பழங்குடியின மாணவிகளுக்கு ரூ.50,000/- மதிப்பில் ஸ்வெட்டர்களையும் என மொத்தம் 437 பயனாளிகளுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மேலும், வல்வில் ஓரி மற்றும் சுற்றுலா விழாவில் நடைபெற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட 17 பள்ளிகளை சேர்ந்த 427 மாணவ, மாணவியர்களுக்கும், 360 கலைஞர்களுக்கும், வல்வில் ஓரி அரங்கில் அமைக்கப்பட்ட 22 அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சியில், சிறப்பாக அரங்கம் அமைத்ததற்காக முதல் இடம் பெற்ற வனத்துறைக்கும், 2-ஆம் இடம் பெற்ற காவல் துறைக்கும், 3-ஆம் இடம் பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் ஆகிய துறைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், தொடர்ந்து, வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கும், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் .மா.பிரியா, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சரவணன், வேளாண் இணை இயக்குநர் .எஸ்.துரைசாமி, துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை கே.கணேசன், மாவட்ட மேலாளர் தாட்கோ பா.ராமசாமி, பழங்குடியினர் திட்ட அலுவலர் பீட்டர், மாவட்ட சுற்றுலா அலுவலர் மு.அபராஜிதன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன், உதவி இயக்குநர் பட்டுவளர்ச்சி முத்துப்பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கே.முருகன், அத்மா குழுத்தலைவர் செந்தில் முருகன், கொல்லிமலை வட்டாட்சியர் அப்பன்ராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *