சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆசிரியர்களிடம் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரித்து மாலைநேர வகுப்பு கள் நடத்த அறிவுறுத்தினார். இதையெடுத்து வகுப்பறைகளுக்கு சென்று மாணவிகளிடம் பள்ளியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பள்ளி வளாகத்திற்குள்ளே விளையாட்டு மைதானம். கழிப்பறை வசதி கூடுதல் வகுப்பறை கட்டிடம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி வருவதாக தெரிவித்தனர்.இதன் பின் அமைச்சர் பொய்யாமொழி பள்ளியில் உள்ள குறைகள் தீர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியத்தார்.
இந்நிகழ்வில் வெங்கடேஷன் எம்.எல்.எ.பேரூராட்சி தலைவர் ஜெயராமன் செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் உதவி தலைமையாசிரியை உமாமகேஷ்வரி மற்றும் ஆசிரியயர்கள் உள்ளிட்ட பலர் உடளிருந்தனர்.,