M.கார்த்திக்ராஜா நாமக்கல் செய்தியாளர்
வேலூரில் பரிசல் போட்டி ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்
பரமத்தி வேலூரில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு காவிரி ஆற்றில் மீனவர்கள் சார்பில் நடைபெற்ற பரிசல் போட்டி முதல் பரிசை ரூபாய் 1001 ராஜா வென்றார்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு 26 ஆம் ஆண்டாக மீனவர்கள் சார்பில் சோழா A பாய்ஸ் நடத்திய காவிரி ஆற்றில் பரிசல் போட்டியில் ஆறு பேர் கலந்து கொண்டனர் பரிசல் போட்டியை பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா முரளி தொடங்கி வைத்தார்
பரிசல் போட்டி பரமத்தி வேலூர் ஆற்றங்கரையிலிருந்து எதிர் கரையில் உள்ள தவிட்டுப்பாளையம் சென்று வந்தடைந்தது இந்த போட்டியில் தொடர்ந்து மூன்று வருடங்களாக முதல் பரிசை ராஜா ரூபாய் 1001 தட்டிச் சென்றார் இரண்டாவது பரிசு 7001 கணேசன் மூன்றாவது பரிசு ரூ 5001 விஷ்வா நான்காம் பரிசு ரூபாய் 3001 கணேசன் என்கின்ற முட்டி ஆகியோர் பரிசுகளை வென்றனர்
இதில் முதல் பரிசு பெற்ற ராஜா அவரது மகன் நான்காவது பரிசை கணேசன் என்கின்ற முட்டி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது பரிசுகளை பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா முரளி வழங்கினார். இரண்டாவது பரிசை வேலூர் காவல் ஆய்வாளர் இந்திராணி வழங்கினார்.
இந்த பர்சல் போட்டியை சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர்.