நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்டங்களான வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பாக இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாமக்கல் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆர். கே .ராமலிங்கம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் டி. எஸ் .விஜய சரவணன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தவர்களை நாமக்கல் நகர செயலாளர் வி. தனபால் வரவேற்று பேசினார்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆசிரியர் பட்டதாரி அணி துணைச் செயலாளர் எஸ். செல்வராஜ் முன்னிலை வகித்தார்
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி வினோத் கண்டன உரையாற்றினார்
இதில் தே.மு.தி.க ஒருங்கிணைந்த நாமக்கல் வடக்கு தெற்கு மாவட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் நகர மற்றும் இதர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் எதிராக பல்வேறு முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள்