கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம்,

அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர். முனைவர். க. பிரேம்குமார் அவர்கள் தலைமையில், நாகரசம்பட்டி காவல் துறை உதவி ஆய்வாளர்கள் மகாலிங்கம் மற்றும் சங்கீதா அவர்கள் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் பற்றியும் அதனால் விளையும் பக்க விளைவுகள், சந்திக்கும் சமூக அவளங்கள் போன்றவற்றை விளக்கி போதைப்பொருள் பயன்படுத்துபவர் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும், மாணவர்களுக்கு அடிமைப்படுத்த கற்றுக் கொடுப்பவர்கள் போன்றவர்கள் மீது சட்டப்படியாக எடுக்கப்படக்கூடிய தண்டனைகள் பற்றியும், மாணவர்களுக்கான உதவி எண்கள் பற்றியும் மிகவும் தெளிவாக விளக்கம் அளித்து,

மாணவர்களிடையே ஏற்பட்ட சந்தேகங்களை தெளிவுபடுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், மற்றும் ஊர் பெரியவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் திரு. நடராஜன் அவர்கள் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *