குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர்,சிறுவன் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது வடலூர், அன்னை சத்யா வீதியை சேர்ந்தவர் அருள் பாண்டியன் மகன் பாரதி பாண்டியன், (14). வடலூர் அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருபவர். இவர் நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனது பாட்டி வீட்டி செல்வதாக கூறி சென்றவர், மாயமானார்.
பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து மகன் மாயமானது குறித்து அருள்பாண்டியன் மனைவி ஜீவா, (34), வடலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.