திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா வீதியிலுள்ள ரவிச்சந்திரன் வீட்டில் வேலை செய்யும் ஆா். மரகதம் (50) என்பவர், கடந்த சனிக்கிழமை இரவு தனது அறையை பூட்டிவிட்டு கீழே வரவேற்பு அறையில் தூங்கியுள்ளார்.
காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது அறை பூட்டு உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 2 பவுன் சங்கிலி, ஒன்றரை பவுனில் இரண்டு ஜோடி காதணிகள் மற்றும் ரூ. 15 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கே. கே. நகா் காவல் நிலையத்தில் மரகதம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மண்ணை
க. மாரிமுத்து.