கடலூர் மாவட்ட செய்தியாளர் கே பாலமுருகன்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை துப்புரவு பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது

தமிழ்நாடு அரசு அனைத்து துறை இரவு காவலர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது

மேலும் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் மொத்தம் ஏழு ஒன்றியங்கள் அதில் இயங்கிவரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது அரசாணை எண் 385 அதன் அடிப்படையில் கம்மாபுரம் ஒன்றியத்தில் பணிபுரியும் துப்புர பணியாளர்கள் 62 பேரும் பண்ருட்டி ஒன்றியத்தில் 81 பேரும் நல்லூர் ஒன்றியத்தில் 85 பேரும் மங்களூர் ஒன்றியத்தில் 54 பேரும் ,ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் 56 பேரும் புவனகிரி துப்புரவு பணியாளர்கள் மற்றும் விருத்தாசலம் பணியாளர்கள் 66 பேர் மொத்தம் 404 பேரை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை இரவு காவலர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மங்களூர் ஒன்றிய செயளாலர் நீலா பண்ருட்டி ஒன்றிய தலைவர் லட்சுமி துணை தலைவர் சோபனா கம்மாபுரம் ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி குமராட்சி ஒன்றிய தலைவர் கோமதி மற்றும் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி நல்லூர் ஒன்றிய தலைவர் சகுந்தலா ஒன்றிய செயலாளர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *