பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டரங்கம் புணரமைப்பு பணி முடிவு பெற்று திறப்புவிழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டாக்டர். கலைஞர், அவர்களின் நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு தலைவர் காடுவெட்டி கே.பி.என். ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கம் மற்றும் புணரமைக்கப்பட்ட புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்ட மன்றத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார் முருகன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், வடக்கு ஒன்றிய செயலாளர் தனசேகர், ஆகியோர்கள் முன்னிலையில் வகித்தனர்

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் இரவாங்குடி, தேவா மங்கலம், உட்கோட்டை, கவுன்சிலர்கள் மற்றும் குருவேலப்பர் கோயில், சலுப்பை ஊராட்சி மன்ற தலைவர், ஆகியோர்கள் ஒன்றிய குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களை, பாராட்டி, வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். நிகழ்ச்சியில் முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வரவேற்புரையா ற்றினார் நிகழ்ச்சியின் நிறைவாக மேலாளர் ஜெ.தாமோதரன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *