வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 565குவிண்டால் பருத்தி
ரூ. 36.84 லட்சத்துக்குஏலம் போனது.
டெல்டா மாவட்டங்களில்நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆகபெரிய அளவில் பருத்திசாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14 ஆயிரம் எக்டேரில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் ஆதிச்ச மங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, மருவத்தூர், மேலவிடையல் உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் சுமார் 8,250 ஏக்கரில்பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சித்தன்வாழர்,வேளூர், மாத்தூர்,விளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் முறையேசுமார் 250 ஏக்கர் வீதம் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஏக்கரில்
கடந்த சில ஆண்டுகளாகபருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டுகூடுதலாக சுமார் 8,250 ஏக்கரில் பருத்தி சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது.
அதனால் இந்தாண்டும்கூடுதலாக விலை கிடைக்கும் என்று அதிகளவில் பருத்தி சாகுபடி செய்திருந்தனர்இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில்அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனைமற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்நிலையில் நடப்புபருவத்திற்கான பருத்தி ஏலம் நேற்று முன்தினம்ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ரமேஷ்
(பொ) உத்திரவின் பேரில்நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்பருத்தியினை கொண்டு வந்தனர். 8வியாபாரிகள்கலந்து கொண்டனர்.
பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் 7ஆயிரத்து 93 ரூபாய்க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ 5,809க்கும், சராசரி விலையாக குவிண்டால் ரூ. 6ஆயிரத்து480க்கும் ஏலம் போனது. பருத்தி மறைமுக ஏலத்தில் 565.98 குவிண்டால் ரூ. 36.84 லட்சம் ஏலம் போனது விற்பனை கூட மேலாளர் வீராசாமி தெரிவித்தார்.