வடலூரில் விடியல் சமூக சேவை அமைப்ப அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
வடலூர் செப்டம்பர்
கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலை ரயில்வே கேட் அருகில் விடியல் சமூக சேவை அமைப்பு அலுவலகம் திறப்பு விழா விடியல் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் புஷ்ப. செளரி ராஜன் தலைமையில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் விடியல் வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசர்கள் மாயவன் . சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஏ.கே. கண்சியூஸ் பீட்டர் ஆசிரியர் விடியல் கவுரவத் தலைவர் பலராமன் விடியல் மக்கள் தொடர்பு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் வரவேற்பு உரையாற்றினர் விடியல் தலைவர் ஆண்ட்ரு அய்யாசாமி இந்தியன் வங்கி LDM ஓய்வு சென்னை . புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆ.அருண்மொழி தேவன் . நெய்வேலி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியன். ஏ.கே. தானப்பன். குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் க.கோவிந்தராஜ் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்
மேலும் நிகழ்ச்சியில் அரவிந்த் குமார் இந்தியன் வங்கி கிளை மேலாளர் விடியல் இணைச் செயலாளர் சுதாகர் பாக்கியலட்சுமி சகாயமேரி குமார் ஆகியோர்கள் பெயர் பலகையை திறந்து வைத்தனர் இறுதியாக விடியில் சமூக சேவை அமைப்பின் நகர அமைப்பாளர் தங்க ஆறுமுகம் நன்றியுரை ஆற்றினார்
நிகழ்ச்சியில் வர்த்தகப் பெருமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசு அனைத்து நிலை ஊழியர்கள் பொதுமக்கள் என அனைவரும் பெரும் திரளாக எழுச்சியுடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்