எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விபத்து.நகராட்சி ஆணையர் பார்வையிட்டு ஆய்வு. அதிகாரிகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மதிய உணவிற்காக சமையலர் கலா நேற்று உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்.

அப்போது தலைமை ஆசிரியை அழைத்ததால் கலா சமையலறையை விட்டு வெளியே வந்துள்ளார் அந்த நேரம் திடீரென சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையம் உபகரணங்கள் சேதமடைந்தன.சமையலர் கலா வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

47 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமையலறை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இன்று சமையல் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கூடியிருந்த பெற்றோர்கள் அதிகாரிகளிடையே பலமுறை நகராட்சியில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,உயிர் சேதம் ஏற்ப்பட்டிருந்தால் என்ன செய்வது,பள்ளியை இழுத்து மூடுங்கள் பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்பிவிட்டு பயத்துடன் காத்திருப்பதாக அதிகாரிகளிடம் ஆவேசத்துடன் கேட்டனர்.

அப்போது துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சமையலறை, பள்ளிக்கட்டிடம் ரூ.33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *