தரங்கம்பாடி அருகே காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுத்துறைகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மயிலாடுதுறை- தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையான காளகஸ்தினாபுரத்தில் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
விழாவில் நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குனர் கோதண்டராமன், பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகள் தலைமை பொறியாளர் வள்ளுவன், நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திர சேகர், மற்ற அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிவள்ளி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் மற்றும பலர் கலந்து கொண்டனர்.