ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

காவிரி டெல்டாவில் குருவைப் பயிர்கள் காய்ந்து வரும் நிலையில் சம்பா சாகுபடி தொடங்க வேண்டிய நிலையில் தீர்ப்பின் படி காவிரி நீரை வழங்கிடாத கர்நாடகா அரசை கண்டித்தும், தமிழகத்திற்க்கு உரிய நீரை திறந்து விட உச்சநீதிமன்றம் கர்நாடக அரசை உத்தரவிடக்கோரியும் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் திருவாரூர் புதிய ரயில் நிலைய முன்பாக புதன்கிழைமை நடைபெற்றது.

தொடர் முழக்கப் போராட்டத்திற்கு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் பி.கந்தசாமி,ஆ.பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும்,விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான கா.மாரிமுத்து போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் டி.ரவீந்திரன் கோரிக்கை விளக்கி பேசி நிறைவுறையாற்றினார்.
விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம்,மாவட்ட விவசாய பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் பி.பாரதி,மதிமுக விவசாய பிரிவு மாநில துணை செயலாளர் கே.சிவவடிவேலு,திராவிடர் கழக மாநில விவசாய அணி க.வீரையன்,மற்றும் டி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

டெல்டா விவசாயிகளின் மீது அக்கறை கொண்டு தண்ணீரை திறந்த விட, கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், காய்ந்து போன குறுவை பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *