‘பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஓவியருக்கு டாக்டர் பட்டம்.. திறமைக்கு அங்கீகாரம் கொடுத்த அமெரிக்க பல்கலைக்கழகம்..’

 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடி பகுதியில் அப்பு வர்மா என்பவர் ஓவியர் மற்றும் ஸ்தபதியாக உள்ளார் இவரது 35 வருட ஓவிய கலை பணியினை சிறப்பிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள 'குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி' இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பத்தாம் வகுப்பு வரை படித்து.. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு  இருந்த அப்பு வர்மா சென்னையில் ஓவியம் வரையும் வேலையில் சேர்ந்துள்ளார்.

தொடர்ந்து அவர் உலக புகழ்பெற்ற ஓவியரான 'ராஜா ரவி வர்மா'வை மானசீக குருவாக ஏற்று.. அவரைப் போலவே சுவாமி உருவங்களை வரைய தொடங்கி இன்று வரை..வரைந்து வருகிறார்.

அப்பு வர்மா, தான் வரைந்த நர்த்தன விநாயகர்  ஓவியத்தை.. கடந்த வருடம் விநாயகர் சதுர்த்தி தொடங்கி.. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி யார், முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழகத்தில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 108 நபர்களுக்கு வழங்கி உள்ளார்.

  அப்பு வர்மா 35 வருடங்களாக ஓவியம் வரைவதிலும் மற்றும் ஸ்தபதியாகவும் பணியாற்றி வருவதை  பாராட்டும் விதமாக 'ஃபைன் ஆர்ட்ஸ்' பிரிவில்.. அமெரிக்காவில் உள்ள 'குளோபல் ஹியூமன் பீஸ் பல்கலைக்கழகம்' இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

 இதுகுறித்து.. ஓவியர் அப்புவர்மா சொல்லும்போது.. "எனது தொடர் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும்...வருகின்ற 02.10.2023, உலக புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் நினைவு நாளான அன்று  பள்ளி மாணவர்களுக்கு இலவச ஓவிய பயிற்சி அளிப்பதற்கு பள்ளி தொடங்க உள்ளதாக கூறினார்.

  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் ஓவியம் வரைந்து,  தன் முயற்சியில் முன்னேறி டாக்டர் பட்டம் பெற்ற 'அப்பு வர்மா' வை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.. 

பேட்டி: அப்புவர்மா (ஓவியர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *