கோவை மாவட்டம் வால்பாறைநகராட்சி சார்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் உத்தரவின் படி, நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
இதில் ஒவ்வொரு வீட்டிலும் மக்கும் குப்பைகளை பிரித்து வழங்குவதன் மூலம் அவற்றை எவ்வாறு உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம் அவைகள் எவ்வாறு மறுசுழற்சிக்கும் மறு பயன்பாட்டிற்கும் அனுப்பப்படுகிறது என்பது பற்றியும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறி அனைவரும் உறுதிமொழியேற்றனர் பின்னர்கல்லூரி முதல்வர் மு.சிவசுப்ரமணியம் மற்றும் தமிழ் துறை பேராசிரியர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி கூறிய நிலையில் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை
தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் பிரசன்னா, கணேஷ், ஜெயந்தி , துளசி மணி, மாரியம்மாள், மேற்பார்வையாளர் ராம், ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்