காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வியியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு…
மகாத்மா காந்தியின் 154வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை எஸ்.வி.என் கல்வியியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றன. காந்தி அருங்காட்சியகத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் தேவதாஸ் “உலகம் போற்றும் தலைவர் மகாத்மா காந்தி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இவர் தனது சிறப்புரையில் “மகாத்மா காந்தி உண்மை ,அகிம்சை ஆகிய விழுமியங்களை பொது வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.. போர், வன்முறை மூலம் கிடைக்கின்ற வெற்றி நிரந்தரமான வெற்றி ஆகாது. அகிம்சை வழியில் போராடி பெறுகின்ற வெற்றியே நிரந்தரமான, முழுமையான வெற்றி ஆகும் என நம்பியவர்இதனால் உலகம் போற்றும் தலைவராக மகாத்மா காந்தி போற்றப்படுகிறார்.
மேலும் காந்தியம் என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பு அல்ல. அது மனசாட்சியின் அடையாளம்” என்று கூறினார். தொடர்ந்து மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றன. காந்திய வழியில்பயணம் செய்வோம்; உண்மை, அகிம்சையை கடைபிடிப்போம்! என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக கல்வியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் தேன்மொழி வரவேற்புரையாற்றினார்.
நிறைவாக கல்லூரியின் உதவி பேராசிரியர் ஞானராஜா நன்றி உரை வழங்கினார் இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.