பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வலங்கைமான் தாலுக்கா அலுவலக ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கு குறித்து விசாரணை நடத்தி, வருவாய்த்துறை ஊழியர்கள் மீது புனையப் பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பில் ஏற்கனவே அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வலங்கைமான் தாலுக்கா அலுவலக ஊழியர்கள் கோரிக்கை அட்டை (பேட்ஐ் )அணிந்து பணியில் விடுபட்டனர்.