நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பேரளம் – அன்னியூர் சாலை பல ஆண்டு காலமாக தார் ரோடு முற்றிலும் சிதைந்து ஜல்லிக்கல் மேலெழுந்து பல்லாங்குழி சாலையாக மாறி உள்ளது.
உடனே தரமான புதிய சாலையாக அமைத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றியம் சார்பாக செப்டம்பர் 25 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு.

பேரளம்-அன்னியூர் சாலை கடந்த 12-ஆண்டு காலமாக. இதனை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கம் சார்பாக கடந்த ஆட்சியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றம், சாலையை சீர் செய்யவில்லை.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 6 ஆவது மாதம் வாலிபர் சங்கத்தின் சார்பாக படைகட்டி போராட்டம் நடைபெற்றது . அப்போது வட்டாட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆறு மாத காலத்தில் சாலையை புதுப்பித்து தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தனர்.

ஆனால் இது நாள் வரை இச்சாலை மிகவும் மோசமாக பராமரிப்பு இன்றி பல்லாங்குழி சாலையாகவும்,பாதி ரோடு இல்லாத அளவுக்கு பல இடங்கள் பள்ளமாக உள்ளது.

திருமீச்சூர் என்ற பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் வரையில் இந்தச் சாலை மிக மோசமாக சீர் அடைந்து உள்ளதாக சிபிஎம் நன்னிலம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் அழைத்து சென்று சேதமடைந்த மோசமான சாலையை காண்பித்தார். மேலும் அவர் கூறும் போது.

இந்த சாலை வழியாக தான் 13 கிராமத்தை சார்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் நன்னிலம், பேரளம்,பூந்தோட்டம் திருவாரூர் உள்ளிட்ட பள்ளி,கல்லூரி மருத்துவமனை மற்றும் திருமீச்சூர் லலிதாம்பிகா கோவில்,திருப்பாம்புரம் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு கடந்து செல்ல வேண்டும். மேலும் தனியார் பள்ளி படிக்கும் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல பள்ளிபேருந்துகள் இந்த வழியாகத்தான் தினமும் தட்டுத்தடுமாறி அச்சத்துடன் மாணவர்களை அழைத்துச் செல்லும் அவல நிலை உள்ளது. தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் கீழே விழுவதும் விபத்தில் காயம் அடைவதும் அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது.

பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத அவல நிலையில் உள்ள இந்த சாலையை உடனடியாக தரமான தார் சாலையாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திசெப்டம்பர் 25ஆம் தேதி நன்னிலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு சார்பாக சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *