தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நீதியிலிருந்து பெரிய ரெட்டை குளம் மறுகாலில் ரூபாய் 76 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர்;-
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே குலையநேரி பஞ்சாயத்து இரட்டைகுளத்தில் பொதுமக்களின்
நீண்ட நாள் கோரிக்கையான தடுப்பு சுவருடன் கூடிய பாலத்தை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நீதியிலிருந்து ரூபாய் 76 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ரெட்டை குளம் மறுகாலில் தடுப்பு சுவர் உடன் கூடிய பாலம் அமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாச்சி சு.பழனிநாடார் தலைமையில் நடைப்பெற்றது.
தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் , சரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்வில் தென்காசி மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் சேர்மக்கனி, சரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ் கே டி ஜெயபால், குலையநேரி பஞ்சாயத்து தலைவர் சீதா பாலமுருகன், கவுன்சில்கள் தெய்வேந்திரன்,
அமுதா சந்திரன், வார்டு உறுப்பினர் தங்ககாளி ,மனோகர் ஊர் நாட்டாமை கணபதி நாடார், சிவராஜா, கோபாலத்தேவர் , செல்லைச்சாமி, மாணிக்கம், பழனி, சீனியம்மாள்,சங்கர்ரதி, செல்லம்மாள் ,முத்து பத்திரகாளி வள்ளியம்மாள் பொன்னுத்தாய் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்