தென்காசி மாவட்டம்
கீழப்பாவூர் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாளாண்மை முகமை திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் தொடர்பான விவசாயிகள் பயிற்சி பாவூர்சத்திரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விவாக்கமையத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த பயிற்சியில் கீழப்பாவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சேதுராமலிங்கம் தலைமையேற்றார்வேளாண் விஞ்ஞானி சுகுமார், சிறுதானியங்கள் கேழ்வரகு, பணிவரகு, சாமை. சோளம். தினை. வரகு, குதிரைவாலி. மக்காசோளம் குறித்து பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சியில் பயிர்மேலாண்மை, நிலம் தயாரித்தல், விதைநேர்த்தி, நீர்மேலாண்மை, நோய்கட்டுப்பாடு பற்றியும் எடுத்துரைத்தார்.
வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது. மேலும் தண்ணீர் தேங்கினாலும் தாக்குபிடிக்ககூடியது. அதிக மகசூல் தரக்கூடியது சிறுதானியங்கள் எனவும் விளக்கமாக எடுத்துடைத்தார்.
துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியன், வேளாண்மை துறையில் உள்ள மானிய திட்டங்கள் பற்றியும் நுண்ணீர் பாசனம் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
உழவன் செயலி குறித்து சகுந்தலாதேவி வட்டார தொழில்நுட்ப மேலாளர் எடுத்துரைத்து நன்றி கூறினார் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சந்திரன் மற்றும் முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.