தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நடைப் பெற்றது..
ஆலங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கங்காதரன் தலைமை தாங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பால்விநாயகம் முன்னிலை வகித்தார்.
சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மாவட்ட ஒங்கிணைப்பாளர் டிக்சன் குமார் வரவேற்புரை வழங்கினார் சுகாதார ஆய்வாளர் நிசாந்த், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுதியும் துப்புரவு பணியாளர்கள் எவ்வாறு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்பது குறித்து பேசினார்.
அதனையெடுத்து சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் பாதுகாப்பு உபகரண பொருட்கள் துப்பரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது கிராம சுகாதார செவிலியர் ஜேனட், வாழ்த்து வழங்கினார்
முடிவில் பணிதளப் பொருப்பாளர் ராஜலெட்சுமி,
நன்றியுரை வழங்கினார் நிகழ்வில் துப்பரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்