வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. உடனடியாக உன் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சிபிஎம் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்த சிபிஎம் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கூறியதாவது, கடந்த காலங்களில் குடவாக்கம் மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் பணியில் இருந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தின் எதிரொலியாக இரவில் வரும் நோயாளிகளை பாதுகாக்கும் வகையில் இரவு பணிக்கு மருத்துவ நியமிக்கப்பட்டார். தற்போது இவர் இரவு நேரத்தில் மருத்துவர் பணியில் இல்லை. மேலும் தற்போது 3 மருத்துவர்கள் மட்டும் பணிபுரிகின்றனர்.
மதியம் 12 மணிக்கு மேல் மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. இதே போல முதலுதவி செய்வதற்கும், நோயாளிகளுக்கு கட்டுவதற்கும் கூட உதவியாளர் இல்லாத அவல நிலை உள்ளது.
மேலும் ஒ பி பார்க்கும் இடத்திலேயே அவசர சிகிச்சைக்குவரும் நோயாளிகளை அட்மிஷன் போட்டு சிறிய அறையில் தங்க வைக்கும் நிலை உள்ளது . சித்தா மருத்துவமனை கட்டிடம் எதிரே உள்ள நோயாளிகள் அட்மிஷன் கட்டிடத்தில் முறையாக பராமரித்து அங்கே சிகிச்சையில் உள்ள நோயாளிகளை பாதுகாக்கும் வகையில் செவிலியரை பணியில் அமர்த்தி நோயாளிகளை கண்காணிக்க வேண்டும். குடவாசல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், பணியாளர்களை உடனே நியமிக்க வேண்டும்.
அவசர சிகிச்சைக்கு இரவில் வரும் நோயாளிகளை பாதுகாக்க மருத்துவமனையில் இரவு தங்கி பணி புரியும் வகையில் மருத்துவர் நியமிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆய்வின் போது குடவாசல் நகர செயலாளர் சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைமணி மற்றும் பலர் இருந்தனர்.