செய்யூர்
செங்கல்பட்டு மாவட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு மண்டபம் அரசு சார்பில் அச்சிறுப்பாக்கத்தில் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து பல மாதங்களாக உள்ளது.
அதை மாவட்ட நிர்வாகம் பணி முழுமையாக நிறைவு செய்து விரைவில் அரசு மணிமண்டபத்தை திறந்து வைக்க வழிவகை செய்ய வேண்டும் மற்றும் பஞ்சமி நில மீட்பு போராளிகள் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஜான்தாமஸ் மற்றும் ஏழுமலை ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகவும் எளிமையில் உள்ளனர். அதனால் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு
அரசு வேலை வழங்குமாறு மனு வழங்கப்பட்டது.
பஞ்சமி நில மீட்பு போராளிகள் ஜான்தாமஸ் மற்றும் ஏழுமலை ஆகியோர்களுக்கு மணிமண்டபம் கட்ட ஒரு ஏக்கர் இடம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒதுக்கி தருமாறு மனு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்றத்திற்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் மதுராந்தகம் ஒன்றியம் ஆகியவற்றில் உள்ள தலித் குடும்பங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவி அனைவருக்கும் பயனாளிகள் பட்டியல் சேர்க்க வழி வகுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் செய்யூர் வழக்கறிஞர் த.பொன்னிவளவன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.