பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே விளத்தூரில் மழை வேண்டியும், கருகும் விவசாய பயிர்களை காப்பாற்றவும் சிறப்பு குத்து விளக்கு பூஜை….
100 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே விளத்தூர் மகா மாரியம்மன் சன்னதியில் மழை வேண்டியும், கருகும் விவசாய பயிர்களை காத்திட வேண்டியும் சிறப்பு குத்து விளக்கு பூஜை ஜோதி அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் செய்தனர்.
மேலும் பள்ளி மாணவிகளும் மழைபெய்ய வேண்டி திருக்குறளை பாடி விளக்கமளித்துள்ளனர் அதனை தொடர்ந்து மகா மாரரியம்மன் பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் விவசாயிகள் மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.