தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில்அன்னூர் கே கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தாரின் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் பிரம்மோற்சவ விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து அன்று இரவு மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனத்திலும்,அடுத்த நாள் சின்ன சேஷ வாகனத்திலும் எழுந்தருளினார் அதைத்தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 21ஆம் தேதி கல்ப விருட்ச வாகனத்திலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ வாரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து மாலை கருட சேவை திரளான பக்தர்கள் புடைசூழ வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அப்போது,ஸ்ரீமலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி திருக் கோவிலை வலம் வந்தார் இந்நிகழ்ச்சியில் அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மற்றும் கே.ஜி நிறுவனத்தின் ஊழியர்கள், பணியாளர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.