கழுகுமலை அருகே உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவிற்கு குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
மாவட்ட கவுன்சிலரும், மாவட்ட திட்டகுழு உறுப்பினருமான தேவிராஜகோபால் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். தொடர்ந்து சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ் கழக உறுப்பினர்களுக்கு வாழ்நாள் உறுப்பினர் படிவங்கள் மற்றும் கடந்த வாரம் மதுரையில் நடந்த மதிமுக மாநாடு தொடர்பான செய்தி வெளியிட்ட நக்கீரன் புத்தகங்களையும் உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவை தலைவர் பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ராமசுப்பு, ஜெயராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் ஆத்தியப்பன், கனகராஜ், வெங்கடாசலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சிமுத்து, பிள்ளையார் நத்தம் துணை தலைவர் லிங்கராஜ், இளையரசனேந்தல் கிளை செயலாளர்கள் பாண்டி, பிரபு (பொறுப்பு), ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜாராம், முன்னாள் கிளை செயலாளர் ராமசாமி, வடக்குபட்டி சுப்புராஜ், தேவர்குளம் மாரிச்சாமி, இணை செயலாளர் திருப்பதி, தர்மத்துபட்டி கண்ணன், தர்மத்துபட்டி இணையதளம் செந்தில், மற்றும் கழக உறுப்பினர்கள் விஜயராஜ், வேலுச்சாமி, கோட்டியப்பன்,கந்தசாமி, நல்லசாமி, சீனிவாசகன், அருள், சிவகுமார், ரவிகுமார்,ராஜேஷ்கண்ணன், செல்வராஜ், கணபதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால் செய்திருந்தார்.