வெற்றி பெற வேண்டும் என்று வேண்டும் வெறி !
வெற்றி எளிதில் கிடைத்து விடாது என்பதை அறி !

வெற்றி எட்டும் கனி என்றே நீ நினைத்திடு !
வெற்றி எட்டாக்கனி என்று நீ நினைக்காதே !

விவேகமாகச் சிந்தித்து வேகமாகச் செயல்படு !
வேறு சிந்தனை விடுத்து ஒரே சிந்தனை செய்திடு !

தோல்வி நேருமோ ? பயத்தை விட்டுவிடு !
தோல்வியைத் துரத்துவேன் துணிவுடன் முடிவெடு !

பயிற்சி முயற்சி தளர்ச்சியின்றித் தொடர்ந்திடு !
அயற்சி இன்றி ஆர்வத்துடன் நடந்திடு !

என்றும் இஸ்டப்பட்டு செயலில் இறங்கு !
என்றும் கஷ்டப்பட்டு செயலில் இறங்காதே !

எனக்கு வரும் என்றே நீ நினைத்திடு !
எனக்கு வராது என்று நீ நினைக்காதே !

என்னால் முடியும் என்றே நீ நினைத்திடு !
என்னால் முடியாது என்று நீ நினைக்காதே !

முடியாது என்று எடிசன் நினைத்து இருந்தால் !
முற்றிலும் இருட்டாகவே இருந்திருக்கும் உலகம் !

முடியாது என்று காந்தியடிகள் நினைத்து இருந்தால் !
முழுசுதந்திரம் இன்றி அடிமையாகவே இருந்திருக்கும்!

முடியாது என்று பெரியார் நினைத்து இருந்தால் !
மூட நம்பிக்கையில் நாடு மூழ்கியே இருந்திருக்கும்!

முடியாது என்று ஆம்ஷ்டிராங் நினைத்து இருந்தால் !
முழு நிலவு மனிதன் கால் படாமலே இருந்திருக்கும்!

முடியும் என்று முயன்றதால்தான் எல்லோருக்கும்
முடிந்தது சாதனைகள் எளிதாக சாத்தியமானது !

முடியும் என்று நீயும் உடன் முயன்றால்தான் !
முடியும் உன்னால் உலகில் சாதிக்க முடியும் !

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறி !
தன்னிகரில்லாதவன் நீ என்பதை அறி!

தன்னம்பிக்கை மலையளவு இருக்கட்டும் !
நன் நம்பிக்கை கடலளவு இருக்கட்டும் !

இறுதி செய்யப்பட்ட வெற்றி உனக்கு உறுதி !
பரிதியாகப் பயணம் தொடரு சிகரம் உனது !

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *