கோவை

கோவை விழாவின் ஒரு பகுதியாக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்…

கோவை மாநகரில் கோவை விழா தொடர்ந்து பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் Healthy Kovai என்ற தலைப்பில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இதில் ஏராளமான அமைச்சு பணியாளர்கள் மாநகர காவலர்கள் இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கோவை விழா நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *