வலங்கைமானில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்ட மாநாட்டில், மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் தமிழக அரசு கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் மாவட்டம் மாநாடு வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார், மாவட்டத் துணைத் தலைவர்கள் நீலன் அசோகன், ரமேஷ், தண்டபாணி, ஏசுதாஸ், விஜயன், சரவண ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

முன்னதாக மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் சேதுராமன் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்பு உரையாற்றினார், மாநிலத் துணைத் தலைவர் சுகுமாரன் சமூக மாற்றத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பறையாட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேல திருமதி குன்னம் மாணவர்களின் நம்ம ஊரு ஆட்டம் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தி பரிசுகளை வழங்கினார். மாநாட்டில் தமிழ்நாடு ஊரக மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநிலத் தணிக்கையாளர் புஷ்பநாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய பொருளாளர் பிரபாகரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கள் கலைஞரின் சங்கத்தின் வட்டார தலைவர் பாலசுந்தரம், வட்டார செயலாளர் அந்தோணி பாக்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், மாவட்ட பொருளாளர் சாந்தகுமாரி அனைவருக்கும் நன்றி கூறினார்,

மாநாட்டின் நிறைவாக புதிய மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் ஸ்டீபன்நாதன் நிறைவுறையாற்றினார்.

இதற்கு பின்னர் ஊராட்சி பகுதிகளில் கிராம நிர்வாகத்தின் மூலம் சேகரிக்கப்படும் ஒரு குப்பைகளை வகை பிரித்து முறையாக மறுசுழற்சி செய்யும் பணிகளை சரி செய்து விடவும் அதனை முறைப்படுத்தவும் அரசு ஆவன செய்ய வேண்டும். சாலை விரிவாக்கத்தின் போது அப்புறப்படுத்தப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகளை நடுவதை அரசு உறுதி செய்திட வேண்டும். அதைத் தொடர்ந்து கண்காணித்து விட வேண்டும்.

மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் தமிழக அரசு கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள குடிநீரை ஆய்வு செய்து அவற்றில் வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் உப்பின் தன்மை கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அதனை தீர்க்கும் வகையில் நீண்டகால அடிப்படையில் செயல்திட்டங்களை அரசு வடிவமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் நிர்மல் நன்றி கூறினார்.

இதில் அடுத்து வரக்கூடிய இரண்டு ஆண்டுகளுக்கான புதிய பொறுப்பாளர்களாக தலைவர் சங்கரலிங்கம், துணைத் தலைவர்களாக நீலன் அசோகன் உள்ளிட்ட 13 பேரும், செயலாளராக பாண்டியராஜன், இணைச்செயலாளராக பொன்முடி உள்ளிட்ட 11 பேரும், பொருளாளராக அன்பழகன் உள்ளிட்ட 27 நிர்வாக குழு உறுப்பினர்களும், 54 செயற்குழு உறுப்பினர்களும், 75 பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *