தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலைமையில் தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் துணை செயலாளர் சிவ சுப்ரமணியன் மாநிலக் குழு உறுப்பினர்கள் பாண்டி மணி ஹரிஹரசுதன் முத்த வழக்கறிஞர்கள் ஜெய பாரதி செல்வமனோகரன் ராமகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் சிவக்குமார் கார்த்திக் ஸ்டீபன் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோர்ட் வழக்குகளில் உடனடியாக கொண்டு வந்துள்ள இ.பைலிங் நடைமுறையை கண்டித்தும் இ.பைலிங் முறைக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.