வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், தைப்பூச பிரமோற்சவ விழாவை முன்னிட்டு பத்து நாட்கள்% விழா நடைபெற்று வருகிறது.

ஆறு மணிக்கு ஜபம், ஓமம், யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உபயதாரர் திருப்பூர் இந்தியன் ஸ்டீல்ஸ் உரிமையாளர் எஸ்.கே. மணி (எ)துரை மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து ஆலயத்தை அடைந்தது. பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. மாலை ஆறு மணிக்கு ஜெபம், ஓமம், யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி அ. ரமேஷ், பரம்பரை அறங்காவலர் வலங்கைமான் கே. நடராஜன்& சகோதரர்கள், சென்னை ஜி சுப்பிரமணியன், உபயதாரர் திருப்பூர் இந்தியன் ஸ்டீல்ஸ் உரிமையாளர் எஸ்.கே. மணி (எ)துரை, வலங்கைமான் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *